search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செஸ் போட்டி"

    • நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.
    • ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் டாடா ஸ்டீல் இந்தியா சர்வதேச செஸ் தொடர் நடைபெற்றது. இதில் பிளிட்ஸ் பிரிவு 18 சுற்றுகளாக நடந்தது.

    இதில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் பிரக்ஞானந்தா உள்பட பலர் பங்கேற்று விளையாடினர்.

    இந்நிலையில், 18 சுற்றுகளின் முடிவில் 9 வெற்றி, 8 டிரா, ஒரு தோல்வி என 13 புள்ளிகளுடன் நார்வேயின் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார். நடப்பு ஆண்டில் கார்ல்சன் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.

    ஏற்கனவே இந்தத் தொடரின் ரேபிட் பிரிவிலும் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
    • போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

    போலந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் தொடரின் முதல் சீசன் நடந்து வருகிறது. 4 நாட்களுக்கு முன்பு துவங்கிய இந்த செஸ் தொடரில் இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் என உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இந்த 9வது சீசனில் போலந்து, ருமேனியா, குரோஷியா ஆகிய நாடுகளில் தலா ஒரு போட்டியும், அமெரிக்காவில் இரண்டு போட்டி என இந்த ஆண்டு முழுவதும் மொத்தம் 5 போட்டிகள் நடக்கும். இப்போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் வீரர் கோப்பையை வெல்வார்.

    இந்த நிலையில் போலாந்து நாட்டில் 9வது கிராண்ட் செஸ் டூர் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த செஸ் தொடரில் நட்சத்திர வீரர்களான பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்லன், குகேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஏழாவது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா விளையாடினார். இந்த ஆட்டம் 49வது நகர்த்தலில் டிராவில் முடிந்தது.

    இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மீண்டும் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து பிரக்ஞானந்தா களமிறங்கினார். இதில் மேக்னஸ் கார்ல்சனை எளிதாக வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தினார். இதன் மூலமாக பிரக்ஞானந்தா புள்ளிப்பட்டியலில் 14.5 புள்ளிகளுடன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    முதலிடத்தில் 20.5 புள்ளிகளுடன் சீனாவின் வெய் இ முதலிடத்திலும், மேக்ன்ஸ் கார்ல்சன் 18 புள்ளிகளுடன் 2வது இடத்திலும் உள்ளனர். அதேபோல் இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டம் நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே யார் வெற்றிபெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    • 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
    • மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

    சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன்ஷிப் 2023 போட்டி இம்மாதம் 15- 21ம் தேதி வரை சென்னை லீலா பேலஸில் நடைபெறவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், இப்போட்டியில் 8 சர்வதேச மற்றும் இந்திய கிராண்ட் மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டியின் மொத்த பரிசுத் தொகையாக ரூ.50 லட்சம் வழங்கப்படவுள்ளது.

     

    • வேலூரில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடந்தது
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அண்ணா அரங்கில் மாநில அளவிலான செஸ் போட்டி இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இப்போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 456 மாணவர்கள், 456 மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டிகள் 11 வயதிற்கு உட்பட்டோர், 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்களும், பரிசுத்தொகை முறையே ரூ.1000, ரூ.800, ரூ.650 என வழங்கப்படவுள்ளது.

    இதில் 14, 17, மற்றும் 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் டிசம்பர் மாதம் 26 முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    செஸ் விளையாட்டு போட்டியானது இங்கே நான்கு பிரிவுகளில் மாநில அளவில் நடைபெறுகிறது. விதிமுறைகளின் படி இந்த விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெற உள்ளது.

    பொதுவாக வெற்றி தோல்வி என்பது நம்முடைய வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இருக்கும். செஸ்ப் போட்டியை பொறுத்தவரை தோல்வியை நெருங்கும் நிலை வரும் பொழுது மாற்றுத் திட்டத்தை பயன்படுத்தி தோல்வி அடையாமல் மீண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.

    அதுபோல் நாம் நம்முடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நிலையிலும் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இத்தகைய மனநிலையை நமக்கெல்லாம் விளையாட்டு போட்டிகள் வழங்குகிறது. எனவே நாம் படிப்பில் ஆர்வம் செலுத்துவதை போல விளையாட்டுப் போட்டிகளிலும் நம்முடைய எண்ணங்களை செலுத்தி நல்ல ஒரு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இன்று நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 456 மாணவர்களும், 456 மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.
    • கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவிரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகட மியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.

    பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி நடை பெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார். பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:

    செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்

    • இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியை காண பாலகிருஷ்ணன் அவருடைய மகன் கவி ரூபனை அழைத்துச் சென்றுள்ளார். போட்டியை நேரில் பார்த்த அந்த சிறுவனுக்கு செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

    இதனை அடுத்து கவிரூபனை புதுக்கோட்டையில் உள்ள மாஸ்டர் செஸ் அகடமியில் அவரது பெற்றோர் சேர்த்தனர்.

    பின்னர் கவிரூபன் செஸ் விளையாட கற்றுக்கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு செஸ் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். மேலும் திருவாரூர், கரூர் ஆகிய இடங்களில் நடந்த மாநில போட்டிகளிலும், திருவாரூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற செஸ் போட்டியிலும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மெர்சி ரம்யாவை மாணவன் கவிரூபன் தன்னுடைய பெற்றோருடன் சந்தித்தார். அப்போது அந்த மழலையிடம் கலெக்டர் பாசத்துடன் உரையாடினார்.

    பின்னர் கவிரூபன் தான் வாங்கிய கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டரிடம் வழங்கி பாராட்டுகளைப் பெற்றார். மேலும் வருகிற ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற இருக்கும் சுதந்திர தின விழாவில் செஸ் போட்டியில் அசத்தி வரும் அந்த சிறுவனுக்கு சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்தார்.

    பின்னர் கபிரூபன் மழலைச் சொல்லில் கூறும்போது:-

    செஸ் போட்டியில் மாவட்ட, மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு கோப்பைகள் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளேன். இதில் சர்வதேச புள்ளி வாங்குவதே என்னுடைய லட்சியம் என்றார்.

    • 118 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் பங்கேற்றனர்.
    • 25 மாணவிகளுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ராணிப்பேட்டை:

    44-வது சர்வதேச ஒலிம்பியாட் சதுரங்க போட்டி சென்னை மகாபலிபுரத்தில் வருகிற 28.7.22-ந் தேதி முதல் 10.8.22-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதனை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11, 12-ந் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக் கிழமை) 2 நாட்கள் ஆற்காடு ராமகிருஷ்ணா மேல்நிலைப்பள்ளியில் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் வெற்றி பெறும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர் 44-வது சர்வதேச சதுரங்க போட்டியை நேரில் காணும் வாய்ப்பு பெறுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டியில் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 118 மாணவர்கள் மற்றும் 43 மாணவிகள் பங்கேற்றனர்.

    இப்போட்டியை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ஆற்காடு நகர மன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.

    இதில் முதல் 25 இடங்களை பிடித்த மாணவர்கள் மற்றும் 25 மாணவிகளுக்கு ஒலிம்பியாட் சின்னம் பொறித்த பரிசு கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மாணவர் பிரிவில் ரிஷிகேஷவா, மாணவிகள் பிரிவில் ஸ்ரீ சாத்விகா ஆகியோர் முதலிடம் பிடித்து, சர்வதேச சதுரங்க போட்டியை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றனர். போட்டிக்கான ஏற்பாடுகளை ராணிப்பேட்டை மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் விஜயகுமார், செயலாளர் அப்துல் கரீம், பொருளாளர் சோழவேந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் கலந்து கொ்ண்டு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.
    • அகாடமிக் டைரக்டர் சாவித்திரி, முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    காங்கேயம் :

    திருப்பூர் ஏஞ்சல் பொறியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் சிவன்மலை ஜேஸீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவன் அஜய் ஜோ லூயிஸ் 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில் கலந்து கொ்ண்டு மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்றார்.

    மாவட்ட அளவில் நடைபெற்ற டேக்வாண்டா போட்டியில் தனிநபர் மற்றும் குழுப்போட்டியில் 12ம் வகுப்பு மாணவர் கேசவன் முதலிடம் பெற்று சாதனை படைத்தார். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், அகாடமிக் டைரக்டர் சாவித்திரி, முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    • 3 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆர்வமுடன் பங்கேற்பு
    • 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரில் 6 சுற்றுகளாக நடைப்பெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டியில் 500-க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்று விளையாடினர்.

    ஒடுகத்தூரில் செயல்பட்டு வரும் வின்னர் செஸ் அகடமி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான சதுரங்கம் போட்டி தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சதுரங்கப் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் திருவண்ணா மலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இப்போடி யானது, மொத்தம் 6 சுற்றுகளாக நடைப்பெற்றது. ஒவ்வொரு சுற்றிலும் வெளியேறும் வீரர்களுக்கு போட்டியில் கலந்து கொண்ட தற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    போட்டியில் முதல் 3 இடத்தை பிடித்தவர்களுக்கு ரொக்க பணம் மற்றும் சான்றிதழ், கோப்பை வழங்கப்பட்டது. நேற்று விடுமுறை நாள் என்பதால் நிகழ்ச்சியில் போட்டி யாளர்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.

    இதனால் அப்பகுதியில் திருவிழாப்போல் காட்சியளித்தது.

    • தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று காலை தொடங்கியது.
    • அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1000- மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    மாநில அளவிலான 24 -வது செஸ் போட்டி தருமபுரி ஸ்ரீ விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் இன்று காலை தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் டி .என்.சி மணிவண்ணன் தலைமை வகித்தார். பள்ளியின் தாளாளர் செல்வி மணிவண்ணன், துணைத்தலைவர் தீபக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளியின் முதல்வர் கௌசல்யா குத்து விளக்கேற்றி போட்டிகளை தொடங்கி வைத்தார். 2 நாட்கள் நடைபெறும் போட்டிகளில் மாநிலம் முழுவதிலும் இருந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1000- மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை சங்க நிர்வாகிகள் செந்தில்குமார், ராஜசேகரன், சேகர் பயிற்சியாளர்கள் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • காமன்வெல்த் செஸ் போட்டியில் மதுரை மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
    • சர்வதேச அளவிலான செஸ் போட்டி களில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை.

    மதுரை

    சர்வதேச காமன்வெல்த் யூத் செஸ் போட்டி இலங்கையில் நடந்தது. இதில் மதுரை டி.எஸ்.பி. நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா (வயது 14) இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

    அவர் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான செஸ் போட்டி யில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற கனிஷ்கா கூறுகையில், "செஸ் விளையாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறேன்.

    மாநில அளவில் தொடங்கி, தேசிய அளவில் முன்னேறி, இன்றைக்கு சர்வதேச அளவில் சாதனை படைத்தது மகிழ்ச்சி தருகிறது. இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும், ருமேனியாவில் நடந்த சர்வதேச போட்டியில் 6-வது இடமும் கிடைத்தது.

    இந்த போட்டிகள் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல உதவியாக இருந்தது. சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை. இதற்காக தினமும் 10-12 மணி நேரம் வரை கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன்" என்றார்.

    கனிஷ்காவுக்கு, தர்ஷனி செஸ் அகாடமி பயிற்சியாளர் ராஜதர்ஷினி மற்றும் நிர்வாகிகள் அழகு செந்தில்வேல், மணிமாறன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • ராமநாதபுரத்தில் மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டி நடந்தது.
    • 17-வது செஸ் போட்டியை முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடத்தியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேசன் சார்பில் ராமநாதபுரம் ரோட்டரி சங்க கோரல் சிட்டி இணைந்து மாநில செஸ் போட்டிக்கான தகுதி தேர்வு போட்டியாக மாவட்ட அளவிலான 17-வது செஸ் போட்டியை முகம்மது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியில் நடத்தியது.

    மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் அப்பா மெடிக்கல் சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் தேவி உலகராஜ், முன்னிலை வகித்தார். செயலாளர்- உடற்கல்வி இயக்குனர் ரமேஷ் வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம், ரோட்டரி சங்க கோரல் சிட்டி உதவி கவர்னர் செந்தில்குமார், தலைவர் சோமசுந்தரம், செயலாளர் ராஜேஷ், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    6 பிரிவுகளாக 5 சுற்றுகள் நடைபெற்ற இந்த போட்டிகளில் 58 பள்ளிகளில் இருந்து 415 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு சிறப்பு போட்டி நடந்தது. 5 பிரிவுகளிலும் முதல் 5 இடங்களை பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடயமும் வழங்கப்பட்டது.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மாவட்ட செஸ் அசோசியேசன் செயலாளர் ரமேஷ், பொருளாளர் குணசேகரன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

    ×